Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பசலைக்கீரை பாஸ்தா ரெசிபி
பசலைக்கீரை பாஸ்தா ரெசிபியை எப்போதாவது முயற்சி செய்ததுண்டா? இது ஒரு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபி மட்டுமல்ல, ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதிலும் காலை வேளையில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபி.
குழந்தைகள் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு அந்த பசலைக்கீரை பாஸ்தை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 2 கப் (வேக வைத்தது)
பசலைக்கீரை - 1/2 கட்டு (நீரில் கழுவி, நறுக்கியது)
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த துளசி இலைகள் - 1/2 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் - 1 டீஸ்பூன்
மிளக் தூள் - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சீஸ் - 1/4 கப் (துருவியது)
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மைதாவை சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் உலர்ந்த துளசி மற்றும் கற்பூரவள்ளி இலைகள், சில்லி ப்ளேக்ஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் பால் ஊற்றி கட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.
பாலானது கொதித்ததும், அதில் பசலைக்கீரை சேர்த்து, 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பிறகு மூடியை திறந்து, அதில் சீஸ் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, பின் அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால், பசலைக்கீரை பாஸ்தா ரெடி!!!



Click it and Unblock the Notifications