Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மாங்காய் ஊறுகாய் செய்யும் போது இதப் பண்ணா இன்னும் சுவையா இருக்கும்!
மாங்காய் கொண்டு ஊறுகாய் தயாரிக்க என்னென்ன தேவை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து சில பயனுள்ள டிப்ஸ்
1.எண்ணைய் எலுமிச்சங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
வெந்தயம், பெருங்காயம் (பொடித்தது) - 1 தேக்கரண்டி.
மிளகாய்த் தூள் - 1 மேஜைக் கரண்டி.
உப்புத் தூள் - 100 கிராம்.
மஞ்சள் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
கீறிய எலுமிச்சம்பழத்தில் இந்த மசாலாவை உள்ளே திணித்தும், மேலே புரட்டியும், எண்ணையோடு சேர்த்து ஜாடியில் போட்டுவைக்கவும். அல்லது, எலுமிச்சம்பழத்தை வெட்டி, மசாலாவில் கலந்து அப்படியே ஜாடியில் எடுத்து வைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய மாங்காய் - 1.
பச்சை மிளகாய் - 15.
வற்றல் (மிளகாய்) - 6
சீரகம் - 2 தேக்கரண்டி.
முருங்கப்பட்டை - 1 அங்குலம்.
வினிகர் (தேவையான அளவு)
கடுகு - 50 கிராம்.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், மிளகாய் இவற்றை நீளமாக வெட்டி உப்பு போட்டு ஒரு ஜாடியில் போட்டுமூன்று நாட்கள் வெயிலில் வைத்து, 3 நாட்கள் கழித்து, வற்றல், சீரகம்,முருங்கப்பட்டை இவற்றை வினிகர் ஊற்றி அரைக்கவும்.
விழுது போல வந்ததும், அதை மாங்காயில் போட்டு வினிகரை மாங்காய் மூழ்கும்அளவுக்கு ஊற்றி வெயிலில் 2 நாட்கள் வைக்கவும். கடுகை வெயிலில் காய வைத்துபூரிக் கட்டையினால் உருட்டி தோலை நீக்கவும். தோல் நீக்கிய கடுகை அம்மியில்வைத்து ஒன்றிரண்டாய் உருட்டி அதையும் மாங்காயில் போடவும்.
தேவையான பொருட்கள்:
மாவடு - 1 படி.
உப்புத்தூள் - 400 கிராம்.
வற்றல் - 18.
கடுகு பொடி செய்தது - 3 மேஜைக் கரண்டி.
மஞ்சள் தூள் - 1 மேஜைக் கரண்டி.
செய்முறை:
மாவடுவைக் கழுவித் துடைத்து விளக்கெண்ணை தடவி வைக்கவும். சுத்தமான ஜாடியில் வெறும் மாவடு ஒரு அடுக்கு, உப்புதூவி மற்றுமொரு அடுக்கு என அடுக்கி 3 நாள் வைத்து விட வேண்டும். இதனால் மாங்காயின் தண்ணீர் சத்து, உப்புடன் சேர்ந்துநீர் விட்டுக் கொண்டிருக்கும்.
பொடி செய்த மசாலாவைக் கலந்து ஒரு வாரம், தினமொரு முறை குலுக்கி நன்கு ஊற வைக்க வேண்டும். மாவடு ஊறுகாய் ரெடி!ஒரு வருடமாயினும் கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications