Latest Updates
-
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சிம்பிளான... பன்னீர் குருமா
இரவில் சப்பாத்திக்கு பன்னீர் கொண்டு ஏதாவது கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பன்னீர் குருமாவை செய்யுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த பன்னீர் குருமாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 3/4 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 1/2 கப்
முந்திரி - 8
கசகசா - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 5
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம், எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications