Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச்
பொதுவாக சாண்ட்விச்சை கடைகளில் சாப்பிட்டால், அவற்றில் நிறைய கொழுப்புக்கள், கலோரிகள் போன்றவை இருக்கும். ஆனால் அவற்றையே வீட்டிலேயே பிடித்தவாறு, வேண்டிய காய்கறிகள் வைத்து சமைத்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும்.
குறிப்பாக இந்த மாதிரியான சாண்ட்விச் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே இதனை காலை வேளையில் செய்து கொடுத்தால், அவர்கள் உடல் நலம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் சாண்ட்விச்சில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச்சை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை பிரட் - 8 (டோஸ்ட் செய்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீஸ் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கேரட்டை போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு 3-4 நிமிடம் வதக்கி, இறக்கி விட வேண்டும்.
பிறகு அதில் துருவிய சீஸை போட்டு, ஒரு முறை கிளறி விட வேண்டும்.
பின்பு பிரட்டை வைத்து, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
பின் அந்த சாண்ட்விச்சை ஒரு பேனில் லேசாக எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது சத்தான மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச் ரெடி!!!



Click it and Unblock the Notifications