Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
புதினா புலாவ்
காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்யுங்கள். இது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.
இங்கு புதினா புலாவ் ரெசிபியை மிகவும் ஈஸியாக எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1/2 இன்ச்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
புதினா - 1 கட்டு
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் புதினா, தேங்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பின் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8-10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், புதினா புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications