Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இஞ்சி தேங்காய் சாதம்
காலையில் வேலைக்கு செல்லும் போதும் சரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும் சரி, வெரைட்டி ரைஸ் தான் செய்வதற்கு எளிமையாக இருக்கும். அத்தகைய கலவை சாதத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு கலவை சாதம் தான் இஞ்சி தேங்காய் சாதம். இந்த இஞ்சி தேங்காய் சாதம் செய்வது என்பது மிகவும் ஈஸியானது.
மேலும் பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த இஞ்சி தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மிளகு தூள் - தேவையான அளவு
துளசி - 6 இலைகள்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பேனில் வெண்ணெயை போட்டு, இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் அரிசி, தேங்காய் பால், 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தண்ணீர் முழுவதும் வற்றி, சூப்பரான சுவையில் இஞ்சி தேங்காய் சாதம் ரெடியாக இருக்கும்.
Image Courtesy: recipegirl



Click it and Unblock the Notifications