Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
தற்போது ஃப்ரைடு ரைஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. எங்கு ஹோட்டலுக்கு சென்றாலும், அங்கு ஃப்ரைடு ரைஸ் வாங்காதவர்களை பார்க்கவே முடியாது. அந்த அளவில் அந்த உணவானது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இப்போது அந்த ஃப்ரைடு ரைஸில் ஒரு வகையான சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ் எனப்படும் பச்சை மிளகாய் மற்றும் பூண்டை மையமாக கொண்டு, எப்படி ஃப்ரைடு ரைஸ் செய்துவதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப் (ஊற வைத்து கழுவியது)
ஸ்ப்ரிங் வெங்காயம் - 4 (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1 கப் (நறுக்கியது)
பூண்டு - 10 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஸ்ப்ரிங் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து, வெங்காயத் தாள் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அஜினமோட்டோ சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின்பு சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் அதில் கழுவிய அரிசியை போட்டு 3-4 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி, 8-10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சைனீஸ் ஸ்டைல் சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!! இதனை அப்படியே அல்லது மஞ்சூரியன் கிரேவியுடன் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications