Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கொண்டைக்கடலை புலாவ்

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 6
கிராம்பு - 5
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 1
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
புலாவ் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, சீரகம், மிளகு, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பிறகு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து, தக்காளி நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்தாக வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, மிளகாய் தூள் மற்றும் புலாவ் மசாலா சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் பாசுமதி அரிசியை கழுவி அதோடு சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கொண்டைக்கடலை புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications