Latest Updates
-
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம்
கேரட் சாதம்
கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இதனை அதிகம் சாப்பிட்டால், கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். அத்தகைய ஆரோக்கியத்தை தரும் கேரட்டை வைத்து ஒரு கலவை சாதம் செய்தால், கேரட் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
அதிலும் இந்த சாதத்தை காலை வேளையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போதோ, விரைவில் சமைப்பதற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்கும். இப்போது இந்த கேரட் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சாதம் - 5 கப்
கேரட் - 2 (துருவியது)
கறிவேப்பிலை - சிறிது
பிரியாணி இலை - 1
கிராம்பு - 5
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே எண்ணெயில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின்பு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 4 நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து, 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி, சாதத்தை போட்டு, 3 நிமிடம் கிளறி இறக்கி, மேலே முந்திரியை தூவினால், சுவையான கேரட் சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications