Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதம்
இன்று நாம் சற்று வித்தியாசமான கலவை சாதத்தைப் பார்க்க போகிறோம். இந்த கலவை சாதம் காலை வேளையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், பேச்சுலர்கள் அனைவரும் செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், இதில் நறுமணமிக்க மசாலா பொருட்கள் சேர்த்திருப்பதால், இது இன்னும் சுவையுடன் இருக்கும். சரி, இப்போது அந்த வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications