Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
பெங்காலி ஸ்டைல்: பூனி கிச்சடி ரெசிபி
இதுவரை எத்தனையோ பெங்காலி ரெசிபிக்களைப் பார்த்திருப்போம். இது சற்று வித்தியாசமான கிச்சடி ரெசிபி. இந்த ரெசிபி செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படும். அதற்கேற்றாற் போன்றே, இதன் சுவையும் சூப்பராக இருக்கும். மேலும் இது ஒரு சூப்பரான காலை உணவும் கூட. பேச்சுலர்கள் வித்தியாசமாக சமைக்க ஆசைப்பட்டால், இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.
சரி, இப்போது அந்த பெங்காலி ஸ்டைல் பூனி கிச்சடி ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
பிரியாணி இலை - 2
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1
வரமிளகாய் - 1
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சர்க்கரை - 1 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 4 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடிக்கு...
வரமிளகாய் - 2
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 4
பட்டை - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காய விழுது - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை லேசாக 4-5 நிமிடம் வறுத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரிசியை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் கரம் மசாலாவிற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும், லேசால வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரியை போட்டு 2 நிமிடம் வறுத்து, தனியாக தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் கிளறி, பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, தக்காளியைப் போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள கரம் மசாலாவை சேர்த்து, 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு துருவிய தேங்காய், உப்பு, சர்க்கரை, உலர் திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து, 5 நிமிடம் கிளறி, வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கினால், சூப்பரான பெங்காலி ஸ்டைல் பூனி கிச்சடி ரெடி!!!



Click it and Unblock the Notifications