Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
வண்டிக்கடை ஸ்பெஷல் வடகறி - ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்த்து செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Vandikadai Special Vada Curry Recipe In Tamil: காலையில் செய்யும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை வடகறி செய்யுங்கள். இந்த வடகறியை 2 விதங்களில் செய்வார்கள். ஒன்று வடையை பொரித்து செய்வார்கள். இரண்டாவது வேக வைத்து செய்வார்கள்.
ஆனால் வண்டிக்கடையில் வேக வைத்து தான் செய்வார்கள். அதோடு எண்ணெய் குறைவாகவும் சேர்த்து செய்வதால், ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இந்த வடகறியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வண்டிக்கடை ஸ்பெஷல் வடகறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வண்டிக்கடை ஸ்பெஷல் வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கடலைப் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
வடகறிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2-3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி,
குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 4 மணிநேரம் கழித்து, நீரை
முழுமையாக வடிகட்டிவிட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் கடலைப்பருப்பு, வரமிளகாய், சோம்பு, பூண்டு
சேர்த்து, நீர் ஊற்றாமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கைகளால் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி
தட்டில் வைக்க வேண்டும்.
* பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, நீர்
சூடானதும், இட்லி தட்டை உள்ளே வைத்து மூடி, 7-8 நிமிடம் வேக வைத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, பிரியாணி இலை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள்,
குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2-3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள பருப்பு
கலவையை கைகளால் உதிர்த்துவிட்டு சேர்த்து கிளறி, குக்கரை மூடி வைத்து,
1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான வடகறி தயார்.



Click it and Unblock the Notifications
