Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Thattapayaru Thengaipal Saadham Recipe in Tamil: தினமும் மதியம் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான குடும்பத் தலைவிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். பெரும்பாலும் உங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கு வெரைட்டி ரைஸ் செய்து கொடுக்க நினைப்பீர்களா? பொதுவாக குழந்தைகளுக்கு தக்காளி சாதம், லெமன் சாதம் போண்றவற்றைத்தான் மதிய உணவாக செய்து கொடுப்பார்கள். ஆனால் எவ்வளவு நாள்தான் இதுபோன்ற கலவை சாதங்களையே செய்து கொடுப்பது.

குழந்தைகளுக்கு புதிதாக ஏதாவது அதேசமயம் ஆரோக்கியமான சாதத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதத்தை ஒருமுறை செய்து கொடுங்கள். தட்டை பயறு புரதச்சத்து நிறைந்ததாக இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகவும், அதேசமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். இந்த தட்டைப்பயிறு தேங்காய்ப்பால் சாதம் கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும். நீங்களும் இதை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
உங்களுக்கு ஆரோக்கியமான தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் சாதம்
- 1/2 கப் தட்டப்பயறு
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 1 அன்னாசி பூ
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1/2 ஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா
- 2 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 1/4 கப் புதினா இலைகள்
- 1/4 கப் கொத்தமல்லி இலைகள்
- 1 கப் தேங்காய்ப் பால்
- 1 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு
மசாலா விழுது அரைக்க:
- பூண்டு - 1 பல்
- இஞ்சி - 1 இன்ச் துண்டு
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- தண்ணீர் - கால் கப்
- தக்காளி - 2
செய்முறை:
- தட்டைப்பயறை நன்றாகக் கழுவி இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- சமைக்கத் தொடங்குவதற்கு முன்பு அரிசியைக் கழுவி ஊறவைக்கவும்.
- மசாலா அரைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் சிறிது எண்ணெயைச் சூடாக்கவும். அதில் மசாலாப் பொருட்கள் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது மற்றும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி நன்கு குழைந்து வேகும் வரை வதக்கவும்.
- பின்னர் ஊறவைத்துத் தண்ணீர் வடித்த தட்டைப்பயிறை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, தட்டைப்பயறு சுமார் 75% வேகும் வரை சமைக்கவும்.
- அதன்பின் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். பின்னர் தேங்காய்ப்பாலைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் ஊறவைத்துத் தண்ணீர் வடித்த அரிசி மற்றும் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- குக்கரை மூடி, இரண்டு விசில் வரும் வரை சமைக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, குக்கரில் உள்ள அழுத்தம் அடங்கும் வரை காத்திருக்கவும்.
- குக்கரைத் திறந்து மெதுவாகக் கிளறி சூடாகப் பரிமாறவும். இல்லையெனில், குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்தனுப்பலாம்.



Click it and Unblock the Notifications
