Latest Updates
-
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்!
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
Summer Special Mango Sharbat Recipe In Tamil: மாம்பழ சீசன் என்பதால் மார்கெட்டில் நல்ல சுவையான மாம்பழங்கள் விலைக் குறைவில் கிடைக்கும். இப்படி விலை குறைவில் கிடைக்கும் போது தான் மாம்பழங்களை ஆசை தீர சாப்பிட முடியும். அதுவும் நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், நிச்சயம் மாம்பழங்களை விதவிதமாக செய்து சாப்பிட விரும்புவீர்கள்.

இதுவரை மாம்பழத்தைக் கொண்டு நீங்கள் மில்க் ஷேக், அல்வா, போளி, ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மாம்பழத்தைக் கொண்டு இந்த கோடை வெயில் காலத்தில் உடலுக்கு இதமளிக்கும் வகையில் சர்பத் செய்து குடித்துள்ளீர்களா? என்னது மாம்பழத்தில் சர்பத்தா என்று கேட்கலாம். ஆம், மாம்பழம் கொண்டும் சர்பத் செய்யலாம். இந்த சர்பத் மிகவும் ருசியாக இருக்கும் மற்றும் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்து குடிப்பீர்கள்.
உங்களுக்கு இந்த மாம்பழ சர்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சப்ஜா விதை - 1 டீஸ்பூன் (ஊற வைத்தது)
* மாம்பழம் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* பால் - 1 1/2 கப் + 1 கப்
* கண்டென்ஸ்டு மில்க் - 200 கிராம்
* குங்குமப்பூ - சிறிது (நீரில் ஊற வைத்தது)
* ஐஸ் கட்டிகள் - சிறிது
* மாம்பழம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மாதுளை - சிறிது
* பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சப்ஜா விதையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதில்
சிறிது நீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் சிறிது
குங்குமப்பூவையும் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு மிக்சர் ஜாரில் 1 கப் நல்ல இனிப்பான மாம்பழத்தை சேர்த்து,
அத்துடன் 1 1/2 கப் பாலை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 200 கிராம்
கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த குங்குமப்பூ நீரை ஊற்றி, அதோடு ஐஸ்
கட்டிகளையும், ஊற வைத்த சப்ஜா விதைகளையும் சேர்த்து கலந்து விட
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள், சிறிது மாதுளை,
பொடியாக நறுக்கிய பிஸ்தா மற்றும் பாதாமை சேர்த்து கலந்தால், சுவையான
மாம்பழ சர்பத் தயார்.
ஊட்டச்சத்து மதிப்பு
1 டம்ளர் (250-300மிலி) மாம்பழ சர்பத்தில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:
* கலோரிகள்: ~320-350 kcal (கண்டென்ஸ்டு மில்க் மற்றும் மாம்பழம் இருப்பதால் கலோரிகள் சற்றே அதிகம்)
* புரதச்சத்து: 6-7 கிராம்
* கார்போஹைட்ரேட்: 45-50 கிராம் (இயற்கை மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரை)
* கொழுப்பு: 10-12 கிராம் (முழுப்பால், கண்டென்ஸ்டு மில்க் மற்றும் நட்ஸிலிருந்து கிடைக்கும் கொழுப்பு)
* நார்ச்சத்து: 2.5-3 கிராம்



Click it and Unblock the Notifications