Latest Updates
-
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Soya Mushroom Sukka Recipe In Tamil: புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாதவர்கள், இம்மாதத்தில் வாய்க்கு ருசியாக அதே சமயம் அசைவ உணவின் சுவைக்கு இணையான ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு, அசைவ உணவின் மீதான ஆசையை போக்கிக் கொள்வார்கள். அப்படி சிக்கன், மட்டனை தோற்கடிக்கும் வகையிலான ஒரு சுக்கா ரெசிபி தான் சோயா காளான் சுக்கா. இந்த சுக்காவானது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், ஒருமுறை இதை சுவைத்தால், பின் புரட்டாசி முழுவதும் அடிக்கடி இந்த ரெசிபியை செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த சோயா காளான் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோயா காளான் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* அன்னாசிப்பூ - 1 இதழ்
* கிராம்பு - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பச்சை மிளகாய் - 1
* தேங்காய் - 1/4 மூடி
* சின்ன வெங்காயம் - 1 கையளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* மிளகு - 3/4 ஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
சுக்கா தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 சிட்டிகை
* கிராம்பு - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* பட்டன் காளான் - 1 பாக்கெட்
* மீல் மேக்கர் - 50 கிராம் (சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து,
குளிர்ந்த நீரில் 2 முறை கழுவிக் கொள்ளவும்)
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் பட்டன் காளானை நீரில் கழுவிவிட்டு, துண்டுகளாக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, நீரை
வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் 2 முறை கழுவி, அதில் உள்ள
அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, அன்னாசிப்பூ, கிராம்பு,
சோம்பு, பட்டை, பச்சை மிளகாய், தேங்காய், சின்ன வெங்காயம்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சிறிது
சின்ன வெங்காயத்தை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மிளகாய் தூள் சேர்த்து
கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போய் எண்ணெய்
பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காளான் மற்றும் மீல் மேக்கரை சேர்த்து கிளறி, மசாலா
அரைத்த ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து, மூடி வைத்து 3-4
நிமிடம் உயர் தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து மீண்டும் கிளறி விட்டு 3 நிமிடம் குறைவான
தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான சோயா காளான் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications
