Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சரவணபவன் பூரி குருமா ரெசிபி... இந்த மாதிரி செய்யுங்க...வீட்ல எல்லாரும் போட்டி போட்டு சாப்பிடுவாங்க...!
Saravana Bhavan Poori Kurma Recipe in Tamil: இட்லி, தோசை போரடித்து விட்டால் உங்கள் வீட்டில் காலை டிபனாக பூரி, சப்பாத்தி என்று செய்வீர்களா? அப்படி பூரி, சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் செய்வீர்களா? அதுவும் அந்த உருளைக்கிழங்கு மசாலாயும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமாக சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலாவை செய்யுங்கள்.
சரவணபவன் ஹோட்டலில் சப்பாத்தி, பூரிக்கு பரிமாறப்படும் குருமா எப்போதும் கொஞ்சம் வித்தியாசமானது மற்றும் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இந்த குருமா செய்வதற்கு ஒரு தனி மசாலாவை அரைக்க வேண்டும். இந்த ஸ்டைலில் குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அனைவரும் இன்னும் அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது பூரி பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சரவணபவன் பூரி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவணபவன் பூரி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- அரை கப் தேங்காய், துருவியது
- 2 டேபிள் ஸ்பூன் முந்திரி
- ½ ஸ்பூன் சோம்பு
- ½ இன்ச் இலவங்கப்பட்டை
- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
- ½ ஸ்பூன் கசகசா
- ¼ கப் தண்ணீர்
குருமா வைக்க:
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ½ டேபிள் ஸ்பூன் கடுகு
- ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
- ½ இன்ச் இலவங்கப்பட்டை
- 1 டேபிள்ஸ்பூன் சோம்பு
- 2 பிரியாணி இலை
- சில கறிவேப்பிலை
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது
- 1 தக்காளி, நறுக்கியது
- ½ கேரட், நறுக்கியது
- 3 டேபிள் ஸ்பூன் பட்டாணி
- 5 பீன்ஸ், நறுக்கியது
- 2 உருளைக்கிழங்கு, நறுக்கியது
- ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள்
- 1 டேபிள் ஸ்பூன் உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ½ டேபிள் ஸ்பூன் சீரக தூள்
- ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, நறுக்கியது
செய்முறை:
- முதலில் மசாலா அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில், அரை கப் தேங்காய், 2 டேபிள் ஸ்பூன் முந்திரி, ½ டீஸ்பூன் சோம்பு, ½ இன்ச் இலவங்கப்பட்டை, 2 ஏலக்காய், 2 கிராம்பு மற்றும் ½ டீஸ்பூன் கசகசாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். ½ டீஸ்பூன் கடுகு, ½ டீஸ்பூன் சீரகம், ½ இன்ச் இலவங்கப்பட்டை, 1 டீஸ்பூன் சோம்பு, 2 பிரியாணி இலை மற்றும் சில கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இப்போது நறுக்கிய பெரிய வெங்காயம், 1 டீஸ்பூன் இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- பின்னர் நறுக்கிய தக்காளி, ½ கேரட், 3 டேபிள்ஸ்பூன் பட்டாணி, நறுக்கிய பீன்ஸ் மற்றும் 2 நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
- பின் ½ ஸ்பூன் மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தும் நன்றாக கலக்கும் கிளறவும்.
- பின் தேவையான அளவுதண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடங்கள் அல்லது காய்கறிகள் நன்றாக வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
- பின் 1 ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் கொத்தமல்லி தூள், ½ ஸ்பூன் சீரக தூள், ½ ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
- குருமா நன்றாக கொதித்து வரும் போது அரைத்த மசாலா விழுது மற்றும் 2 கப் தண்ணீரைச் சேர்க்கவும்.
- இதை மூடி வைத்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.
- குருமா வாசனை வந்ததும் நன்றாக கிளறி ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான சரவணபவன் பூரி குருமா ரெடி!



Click it and Unblock the Notifications











