Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Rice Flour Coconut Cake Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியோடு வரும் உங்கள் பிள்ளைகளுக்கு வயிறு நிரம்பும் வகையிலும், வாய்க்கு ருசியாகவும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் எண்ணெயில் பொரிக்காமல் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அரிசி மாவும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கேக் செய்து கொடுங்கள். இந்த அரிசி மாவு தேங்காய் கேக் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு இந்த அரிசி மாவு தேங்காய் கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி மாவு தேங்காய் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* ஏலக்காய் - 2
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 கப் + 1 கப்
* நாட்டுச்சர்க்கரை - 1 கப்
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
* நெய் - 2 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரிசி மாவு, துருவிய தேங்காய் ஆகியவற்றை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் ஏலக்காய், ஓமம், உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து, 1 கப் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, நாட்டுச்சர்க்கரை கரைந்ததும், அதை இறக்கி
கலந்து வைத்துள்ள மாவுடன் சூடாக இருக்கும் போதே சேர்த்து நன்கு
கட்டிகளின்றி கலந்து விட வேண்டும்.
* பின் அதில் 2 சிட்டிகை ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து விட
வேண்டும்.
* அடுத்து ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் கலந்து வைத்துள்ள அரிசி மாவு கலவையை சேர்த்து மூடி
வைத்து 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் ஒரு தோசைக் கல்லை மற்றொரு அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
அதில் இந்த வாணலியில் வெந்த கேக்கை தலைகீழாக திருப்பி போட்டு 2
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான அரிசி மாவு தேங்காய் கேக்
தயார்.



Click it and Unblock the Notifications
