Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
எப்பவும் வெறும் தோசை சுடாம.. ஒருவாட்டி இந்த பூண்டு கார தோசையை சுடுங்க.. அள்ளும்...
Poondu Kara Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை சுடுவீர்களா? அதுவும் எப்போதும் வெறும் தோசையை தான் சுடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை பூண்டு கார தோசையை சுட்டு, அதற்கு சைடு டிஷ்ஷாக ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை செய்யுங்கள். இப்படி தோசையை சுட்டு கொடுத்தால் வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த காம்பினேஷன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கு இந்த பூண்டு கார தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார தோசை மற்றும் ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* தோசை மாவு
* எண்ணெய்
மசாலா அரைப்பதற்கு..
* பூண்டு - 10 பல்
* வெங்காயம் - 1/2
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சட்னிக்கு...
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* பூண்டு - 2 பல்
* சின்ன வெங்காயம் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 10 பல் பூண்டு மற்றும் பாதி வெங்காயத்தை
நறுக்கி சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி தோசை
மாவை ஊற்றி மெல்லிய தோசையாக ஊற்ற வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள விழுதை வைத்து பரப்பி, எண்ணெய்
ஊற்றி, முன்னும் பின்னும் மொறுமொறுவென்று வேக வைத்து எடுத்தால்,
பூண்டு கார தோசை தயார்.
* இந்த தோசைக்கு ஹோட்டல் தேங்காய் சட்னி அற்புதமாக இருக்கும். அதற்கு
மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், 2 பல் பூண்டு, சின்ன வெங்காயம்,
இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து முதலில் ஒருமுறை அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லியை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை
ஜாரில் ஊற்றி அலசி ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications