Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
பருப்பு புட்டு
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், பருப்பு புட்டு செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், பருப்பு புட்டு செய்து கொடுங்கள். பருப்பு புட்டில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு பருப்பு புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே பருப்பு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* புழுங்கல் அரிசி - 1/4 கப்
* உப்பு - 1/8 டீஸ்பூன்
* சர்க்கரை - 3/4 - 1 கப்
* துருவிய தேங்காய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அனைத்து பருப்புக்களையும், அரிசியையும் நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரிசி மற்றும் பருப்புக்களை நன்கு கழுவி, மிக்சர் ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள மாவை இட்லி குழியில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வெந்துள்ள பருப்பு இட்லியை நீர் தெளித்து எடுத்து, புட்டு போன்று உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி, முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் பவுடர் மற்றும் வறுத்த முந்திரியையும் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் கிளறி விட்டு இறக்கினால், சுவையான பருப்பு புட்டு தயார்.
குறிப்பு:
* புட்டில் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* புட்டு தயாரித்த உடனே சூடாக சாப்பிடாமல், சற்று குளிர்ந்த பின் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், அது பிசுபிசுப்பாக இருக்கும்.
* சர்க்கரை பாகுவில் புட்டு சேர்த்ததும் ஒரு நிமிடத்திற்கு மேலே அடுப்பில் வைக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது கடினமாகிவிடும்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications