Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1/2 கப் பச்சை பயறும், 1/2 கப் அரிசியும் இருந்தா இந்த சத்தான கஞ்சியை செய்யுங்க... எடை வேகமாக குறைஞ்சிரும்...!
Pachai Payaru Kaikari Kanji Recipe in Tamil: காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வழக்கத்தை விட இப்போது அதிகமாக உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? உடல் எடை உங்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறதா? அப்படியானால் உடலுக்கு வலுசேர்க்கும் படி, பச்சை பயிறை அரிசியுடன் சேர்த்து இப்படி கஞ்சி செய்து குடிக்கவும்.
அதுவும் அந்த கஞ்சியுடன் சில ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து செய்யும் போது, அதன் சுவை அதிகரிப்பதோடு, அதன் ஊட்டச்சத்து மதிப்பும் அதிகரிக்கும். மேலும் இந்த கஞ்சியை அடிக்கடி செய்து குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து வலிமை அதிகரிப்பதோடு, உடல் எடையும் குறையும்.

உங்களுக்கு வெஜிடேபிள் பச்சை பயிறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் பச்சை பயிறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரிசி - 1/2 கப்
- பச்சைப் பயிறு - 1/2 கப்
- கேரட் - 1
- வெள்ளரிக்காய் - சிறிதளவு
- பீன்ஸ் - 5
- தக்காளி - 1
- சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
- பூண்டு - 4
- வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 5
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அரிசி, பச்சை பயிறை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ், தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி மற்றும் பச்சைப் பயிறை போட்டு வேக வைக்கவும்.
- அரிசி மற்றும் பச்சைப் பயிறு பாதியளவு வெந்ததும் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து வேக விடவும்.
- மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, வெந்தயம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- வதக்கிய வெங்காயம், தக்காளியை அரிசி கலவையுடன் சேர்த்து வேக விடவும்.
- 30 நிமிடங்கள் கஞ்சி நன்றாக கொதித்து அரிசி மற்றும் காய்கறிகள் வெந்தவுடன் இறக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான காய்கறி பச்சை பயிறு ரெடி.
- உடலில் நீர்சத்து குறைவாக உள்ளவர்களும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த காய்கறிக் கஞ்சியை அடிக்கடி செய்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications