Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உடல் எடையைக் குறைக்க உதவும் ஓட்ஸ் ஆம்லெட் - எப்படி செய்யணும் தெரியுமா?
Oats Omelette Recipe In Tamil: உடல் எடையை குறைக்க நினைப்போர் காலையில் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்டால் தான் அடிக்கடி பசி எடுக்காமல், நீண்ட நேரம் வயிறும் நிறைந்திருக்கும், உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். பொதுவாக எடையைக் குறைப்போருக்கு ஓட்ஸ் நல்லது. இதற்கு அதில் உள்ள நார்ச்சத்து முக்கியமான காரணம்.
ஆனால் ஓட்ஸை நிறைய பேர் கஞ்சியாகத் தான் சாப்பிடுவார்கள். இருப்பினும், ஓட்ஸ் கஞ்சி நிறைய பேருக்கு பிடிக்காது. பிடிக்காமலேயே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பர். ஆனால் இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனெனில் ஓட்ஸைக் கொண்டு அருமையான சுவையில் ஆம்லெட் செய்யலாம். இந்த ஓட்ஸ் ஆம்லெட் செய்வது மிகவும் சுலபம் மற்றும் சத்தானதும் கூட.

உங்களுக்கு ஒட்ஸ் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் - 1/2 கப்
* காய்ச்சிய பால் - தேவையான அளவு
* முட்டை - 3
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1/2 கப் ஓட்ஸை சேர்த்து நன்கு பொடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு பாலை ஊற்றி, தோசை
மாவு பதத்திற்கு கலந்து மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மற்றொரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு
மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஓட்ஸ் மாவுடன், பொடியாக நறுக்கிய குடைமிளகாய்,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட்
சேர்த்து, வேண்டுமானால் சிறிது உப்பையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் அடித்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலவையை
கொஞ்சமாக கல்லில் ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* பின் திருப்பிப் போட்டு 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
ஓட்ஸ் ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications