Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
முட்டை மற்றும் பூண்டு ஃப்ரைடு ரைஸ்
காலையில் எழுந்து ஈஸியாக சமைக்கும் வகையில் என்ன உள்ளது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால், வீட்டில் முட்டை மற்றும் பூண்டு இருந்தால், அவற்றைக் கொண்டு ஈஸியான ஒரு ஃப்ரைடு ரைஸ் செய்து பாருங்கள். குறிப்பாக பேச்சுலர்களுக்கு இது ஒரு அருமையான ரெசிபி.
சரி, இங்கு அந்த முட்டை மற்றும் பூண்டு ஃப்ரைடு ரைஸின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சாதம் - 1 பௌல்
முட்டை - 1 (ஒரு பௌலில் நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்)
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 (தட்டியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக பிரட்ட வேண்டும்.
பின்பு சாதத்தை சேர்த்து கிளறி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியை தூவி இறக்கினால், சுவையான முட்டை மற்றும் பூண்டு ஃப்ரைடு ரைஸ் ரெடி!!!!



Click it and Unblock the Notifications