Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சுவையான ஃபிங்கர் ஃபிஷ்

தேவையான பொருட்கள்
நெய் மீன் - 5 துண்டு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கார்ன் ப்ளார் - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
சாட் மசாலா - கால் ஸ்பூன்
சீரக தூள் - கால் ஸ்பூன்
அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
மைதா மாவு - ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் - கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
முட்டை - ஒன்று
கேசரி பவுடர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவையான அளவு
ஆயில் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். மீன் ஆறிய பிறகு மீனில் உள்ள முட்களை எல்லாம் நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து விடவும்.
பிறகு உதிர்த்த அந்த மீனில் கார்ன் ப்ளார் சேர்த்து மெதுவாக பிசையவும். பின் விரல் நீளத்திற்கு சிறு சிறுத் துண்டுகளாக உருட்டி வைக்கவும்.
பின்னர் கார்ன் ப்ளார், மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, மிளகு தூள், சாட் மசாலா, சீரக தூள், அரிசி மாவு, மைதா மாவு, சோயா சாஸ், எலுமிச்சை சாறு, கேசரி பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கடைசியாக முட்டை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின் உருட்டிய மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி.



Click it and Unblock the Notifications