Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்..
சாம்ப் மசாலா
ரம்ஜான் வரப்போகிறது. இந்நாளன்று எப்போதும் பிரியாணியை மட்டும் செய்து சாப்பிடாமல், அப்போது சற்று வித்தியாசமாக, மட்டனைக் ஒரு மசாலா போன்று செய்து பார்க்கலாம். இந்த வித்தியாசமான ரெசிபிக்கு பெயர் சாம்ப் மசாலா. இது மிகவும் எளிமையான ஒரு மட்டன் ரெசிபி. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. அதுமட்டுமல்லாமல், இந்த ரெசிபியை பண்டிகை காலங்களில் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது செய்தால், விருந்தினர்களிடம் இருந்து பாராட்டைப் பெறலாம்.
இப்போது அந்த சாம்ப் மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)
தக்காளி - 2 (அரைத்தது)
வெங்காயம் - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை வினிகர் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பட்டை மற்றும் கிராம்பு பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தீயை குறைவில் வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து தீயை குறைவில் வைத்து, மட்டனைப் போட்டு, 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்தே 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான சாம்ப் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications