Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
முருங்கைக்காயை இந்த மாதிரி சூப் வைச்சு குடிச்சு பாருங்க... உடம்புல இருக்கிற பாதி நோய் காணாம போயிடும்...!
Murungakkai Soup Recipe In Tamil: தற்போது மாறி வரும் பருவநிலை காரணமாக குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற உபாதைகள் அதிகம் ஏற்படும். பலர் இதன் காரணமாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் குடிப்பது, பூண்டு மிளகு சேர்த்து ரசம் சாப்பிடுவது என பலவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள துவங்கி இருப்பார்கள்.
உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்படாமல் இருக்க வீட்டில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பொருட்களை வைத்து சூப் செய்வோம். வித்தியாசமாக முருங்கைக்காயை வைத்து எப்படி சூப் செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- முருங்கைக்காய் - 4
- உருளைக்கிழங்கு - 1
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- எலுமிச்சை பழம் - ½ பழம்
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- வெண்ணெய் - தேவையான அளவு (தாளிக்க)
- மல்லித் தூள் - 1 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- பூண்டு - 2 பல்
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முருங்கை காயை கழுவி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின் வெங்காயத்தை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை தண்ணீரில் கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- உருளைக்கிழக்கின் மேற்பகுதியில் மண் இல்லாமல் சுத்தமாக அலசி விட்டு தோலை சீவி கொள்ளவும்.
- பின் உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து அதில் நறுக்கி உருளைக்கிழங்கு துண்டுகள், முருங்கை காய், வெங்காயம், மற்றும் தக்காளியை சேர்த்து கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
- நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- விசில் அடங்கியதும் தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
- அதில் முருங்கைக்காயை மட்டும் தனியே எடுத்து, அதன் சதை பகுதியை தனியாக எடுத்து வைக்கவும்.
- மீதம் இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- இப்போது அதை வேகவைத்து வடிகட்டிய தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- தனியே எடுத்து வைத்த முருங்கை காயின் அதை பகுதியையும் சேர்த்து கலந்து விடவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் மல்லித்தூள், பச்சை மிளகாய், தோல் உரித்து வைத்த பூண்டு, மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் சூடானதும் வெண்ணெய் சேர்க்கவும்.
- வெண்ணை உருகியதும் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, மற்றும் வெங்காயம் கலந்த வைத்த தண்ணீரை சேர்க்கவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- கடைசியாக எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான முருங்கை காய் சூப் ரெடி!



Click it and Unblock the Notifications