Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முருங்கைக் கீரையை வைச்சு இந்த மாதிரி கஞ்சி வைச்சு குடிச்சு பாருங்க... எடை புயல் வேகத்துல குறையும்...!
Murungai Keerai Kanji Recipe in Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை, உப்புமா என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அதுவும் தற்போது சீசன் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதால், சமையலறையில் நீண்ட நேரம் நிற்க முடியாது. இந்நிலையில் டக்கென்று காலை டிபனை செய்யத்தான் அனைவரும் விரும்புவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கஞ்சிதான் ஆரோக்கியமான மற்றும் பெஸ்ட் டிபனாக இருக்கும்.
அதுவும் வெறும் கஞ்சியை செய்வதற்கு பதிலாக, முருங்கைக் கீரை சேர்த்து கஞ்சியை செய்து குடித்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து மற்றும் பிற சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் டயட்டில் இருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த காலை உணவாக இருக்கும். இந்த கஞ்சி எடையை குறைப்பது மட்டுமின்றி வயிற்று வலி மற்றும் வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.

இந்த கஞ்சியைக் குடித்தால் நீண்ட நேரம் பசி எடுக்காது. இந்த கஞ்சிக்கு ஊறுகாய் அல்லது தேங்காய் துவையல் அட்டகாசமான சைடிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளும் இதை விரும்பி குடிப்பார்கள். உங்களுக்கு முருங்கைக் கீரை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக் கீரை கஞ்சியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - அரை கப்
- முருங்கை கீரை - 1 கப்
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
அரைக்க:
- சோம்பு அரை டீஸ்பூன்
- சீரகம் அரை டீஸ்பூன்
- துருவிய தேங்காய் - கால் கப்
- சின்ன வெங்காயம் - 6
செய்முறை:
- நன்றாக பச்சரிசியை கழுவி சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்
- முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்
- அரைக்க கொடுக்கப்பட்டு இருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்
- குக்கரை அடுப்பில் வைத்து அதில் முருங்கைக்கீரை, பச்சரிசி, உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்
- குக்கர் விசில் போனவுடன், மூடியை திறந்து அதில் அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி கொதிக்க வைத்து கொள்ளவும்.
- பின்னர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து அதில் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைத்து கொள்ளவும்
- அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்து வரும் பொழுது இறக்கி பரிமாறினால், சுவையான முருங்கை கீரை கஞ்சி தயார்



Click it and Unblock the Notifications