Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க... உங்க எடை டக்குனு குறையறத பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க...!
Kuthiraivali Kanji Recipe In Tamil: இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது முன்னோர்கள் கூறியது. உடல் எடை அதிகரிக்க எள்ளும், எடை குறைக்க கொள்ளும் உதவும் என்பது இதன் அர்த்தம். கொள்ளு என்றதும் சிலர் அதை குதிரை தான் சாப்பிடும் என்பார்கள்.
ஆனால் குதிரையின் பெயரிலேயே இருக்கும் ஒரு அரிசி உங்க டயட்க்கு உதவி செஞ்சு கடகடன்னு எடையை குறைக்க உதவும். ஆமாங்க அது குதிரைவாலி அரிசி தான். சரி வாங்க குதிரைவாலி அரிசியை வச்சு எப்படி டயட் கஞ்சி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:
- குதிரைவாலி - ½ கப்
- பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 2½ முதல் 3 கப் வரை
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- இஞ்சி - சிறிதளவு (1 இன்ச் அளவு)
- பச்சை மிளகாய் - 1
- உளுந்தம் பருப்பு - ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- குதிரைவாலி அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று முறை நன்றாக அலசி கொள்ளுங்கள்.
- குக்கரில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து அதனுடன் 2½ முதல் 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வரும் வரை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை கழுவி நடுவில் இரண்டாக கீறி வைக்கவும்.
- விசில் அடங்கியதும் வேகவைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை நன்றாக மசித்து கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- உங்களுக்கு கஞ்சி பதத்திற்கு வேண்டும் என்றால் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- அதில் இஞ்சி, கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து கஞ்சியுடன் சேர்த்து கிளறினால் சுவையான டயட் குதிரைவாலி அரிசி கஞ்சி ரெடி!
- தேவைப்பட்டால் மோர் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications