Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வீட்டுல கறிவேப்பிலை அதிகமா இருக்கா? அப்ப ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
Karuveppilai Chutney Recipe In Tamil: இன்று காலையில் இட்லி, தோசை சுடுற ஐடியா இருக்கா? அதுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகமாக உள்ளதா? உங்கள் வீட்டில் யாரும் சமையலில் சேர்க்கும் கறிப்பிலையை சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கறிவேப்பிலையைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் சட்னியை செய்து கொடுங்கள்.
இந்த கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும். பொதுவாக கறிவேப்பிலை சட்னியில் லேசான கசப்பு தெரியும். ஆனால் இந்த கறிவேப்பிலை சட்னியில் அந்த கசப்பு தெரியாது.

உங்களுக்கு கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பச்சை மிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 2 கைப்பிடி
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கறிவேப்பிலையை நீரல் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலையை சேர்த்து, சுருங்கும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கறிவேப்பிலை சட்னி
தயார்.
Image Courtesy: Indian Curry



Click it and Unblock the Notifications