Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
காலையில் 1 கப் கம்மஞ்சோறும், கொள்ளு மசியலும் செஞ்சு சாப்பிடுங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்...
Kammanchoru With Kollu Masiyal Recipe: நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? காலையில் ஒரு அருமையான டிபனை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கம்பு மற்றும் கொள்ளு உள்ளதா? அப்படியானால் அவற்றை கொண்டு உடலுக்கு சத்தான முளைக்கட்டிய கம்மஞ்சோறும், கொள்ளு மசியலும் செய்து சாப்பிடுங்கள். இவ்விரண்டுமே உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கும். முக்கியமாக இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து ஃபிட்டாக்கிவிடும்.
உங்களுக்கு கம்மஞ்சோறும், கொள்ளு மசியலும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்மஞ்சோறும், கொள்ளு மசியலும் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துசெய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு மசியலுக்கு...
* கொள்ளு - 3 ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பச்சை மிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
கஞ்சிக்கு...
* முளைக்கட்டிய கம்பு மாவு - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கொள்ளு விதைகளை எடுத்து,
நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய கொள்ளு விதைகளை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் குக்கரில் வறுத்த கொள்ளு, தேவையான அளவு தண்ணீர் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, முதலில்
உயர் தீயில் வைத்து 3 விசிலும், குறைவான தீயில் வைத்து 3 விசிலும்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, ழுண்டு, கறிவேப்பிலை, சீரகம், வரமிளகாய்,
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குக்கரில் உள்ள கொள்ளுவை சேர்த்து கிளறி, மூடி வைத்து
3 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
சூடானதும், ஒரு கிண்ணத்தில் 1 கப் முளைக்கட்டிய கம்பு மாவை எடுத்துக்
கொள்ள வேண்டும். பின் அந்த சுடுநீரை கம்பு மாவுடன் சேர்த்து கலந்து,
அடுப்பில் உள்ள நீரில் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பாதியாக
மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி 10
நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சிறிது கொத்தமல்லியை சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த மசியலை கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தட்டில் கம்பஞ்சோற்றை எடுத்து, அத்துடன் கொள்ளு மசியலை
வைத்து பரிமாறினால், சுவையான கம்பஞ்சோறு மற்றும் கொள்ளு துவையல்
தயார்.



Click it and Unblock the Notifications