Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
3 தக்காளி இருந்தா.. காலையில் இட்லி, தோசைக்கு இப்படியொரு சாம்பார் செய்யுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Instant Tomato Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுத்துவிட்டீர்களா? இன்னும் இல்லையா? இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் தான் சரியான காம்பினேஷன். இன்று உங்கள் வீட்டில் சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 3 தக்காளி உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். வீட்டில் உள்ள குறைவான பொருட்களைக் கொண்டே இட்லி தோசைக்கு அருமையான சாம்பாரை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த சாம்பார் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம்.

உங்களுக்கு தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி, பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சாம்பார் தூள்
சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பிறகு 2 ஸ்பூன் கடலை மாவை, 3 கப் நீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி
கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் பச்சை வாசனை போய் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்க்க வேண்டும்.
* இறுதியில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி
சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications
