Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ராகி கூழை வாரம் 2 முறை இப்படி செஞ்சு குடிங்க.. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் சர்ர்ன்னு குறையும்..
High Protein Weight Loss Ragi Koozh Recipe In Tamil: நீங்கள் குண்டா இருக்கீங்களா? உங்க உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரை வெளியேற்ற வேண்டுமா? வீங்கிய உங்கள் உடலை குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்கு டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் அந்த டயட்டில் ராகி கூழையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புரோட்டீன் நிறைந்த ராகி கூழை உடல் பருமனானவர்கள் குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் வேகமாக குறையும். எலும்புகள் வலுவடையும், உடலில் நீண்ட நேரம் ஆற்றல் நிலைத்திருக்கும். அதுவும் ராகி கூழை வழக்கமாக தயாரித்துக் குடிக்காமல், அத்துடன் பட்டர் பீன்ஸ், வெங்காயம், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் என பல பொருட்களை சேர்த்து தயாரித்து குடிக்க வேண்டும்.

இப்படி தயாரித்த கூழை வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால், வேகமாக உடல் எடை குறைவதைக் கண்கூடாக காணலாம். முக்கியமாக இந்த கூழை குழந்தைகளுக்கும் கொடுத்து வந்தால், அவர்களின் தசை நன்கு இறுக்கமடைந்து, எலும்புகள் வலுவடைந்து, மிகவும் வலிமையாக இருப்பார்கள்.
உங்களுக்கு எடை இழப்பை ஊக்குவிக்கும் ராகி கூழை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி கூழ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பட்டர் பீன்ஸ் - 50 கிராம்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
கூழ் செய்வதற்கு...
* ராகி மாவு - 100 கிராம்
* தண்ணீர் - 1 கப் + 2 1/2 கப்
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* துருவிய தேங்காய் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் பட்டர் பீன்ஸை எடுத்துக் கொண்டு, அதில் பீன்ஸ்
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பீன்ஸை மசித்து விட
வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் 100 கிராம் ராகி மாவை எடுத்து, 1 கப் நீரை ஊற்றி
கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி,
நீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கரைத்து வைத்துள்ள
ராகியை ஊற்றி, தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* ராகி நன்கு வெந்து ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், அதில் துருவிய
இஞ்சி, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க
வேண்டும்.
* பின் அதில் துருவிய கேரட், சிறிது தேங்காய், கொத்தமல்லி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, 2-3 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* பிறகு அதை இறக்கி மிளகுத் தூளைத் தூவி கிளறி பரிமாறினால், சுவையான
ராகி கூழ் தயார்.



Click it and Unblock the Notifications