Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம்
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Vegetable Egg Semiya Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை செய்வீர்களா? இதனால் உங்கள் பிள்ளைகள் இட்லி, தோசை என்றாலே சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் அவர்களுக்கு சற்று வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் சேமியா பாக்கெட்டும், முட்டையும் இருந்தால், அவற்றைக் கொண்டு முட்டை சேமியா செய்து கொடுங்கள். இந்த முட்டை சேமியா மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. ஒருமுறை இப்படி செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

இந்த முட்டை சேமியா குறித்து ரெசிபிஸ்இன்மைவே என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வெஜிடேபிள் முட்டை சேமியாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் முட்டை சேமியா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சேமியா - 2 கப் அல்லது 200 கிராம்
* தண்ணீர் - 1 லிட்டர்
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 (மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* ப்ரைடு முட்டை
முட்டை ப்ரைக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 3
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சேமியாவை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு ப்ரை
செய்ய வேண்டும்.
* பின் அதில் 1 லிட்டர் நீரை ஊற்றி, 1 பச்சை மிளகாயை கீறி போட்டு,
சிறிது உப்பு சேர்த்து கிளறி, 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து, அதை இறக்கி, வடிகட்டி பயன்படுத்தி சேமியாவை
வடிகட்டி, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, ஒரு தட்டில் போட்டு பரப்பி
குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிய கேரட் மற்றும்
பீன்ஸை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* காய்கறிகள் வேக வேண்டும் என்பதால் மூடி வைத்து மிதமான தீயில் வைத்து
2-3 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் முட்டையை
ப்ரை செய்ய எண்ணெய் ஊற்றி சூடானதும், 3 முட்டைகளை உடைத்து ஊற்றி,
அத்துடன் உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி இறக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், மூடியைத் திறந்து தக்காளி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து 1 நிமிடம் கிளறி,
பின் ப்ரை செய்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்னர் வேக வைத்த சேமியாவை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி
இறக்கினால், சுவையான வெஜிடேபிள் முட்டை சேமியா தயார்.



Click it and Unblock the Notifications