Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ராகி சேமியாவை ஒருவாட்டி இந்த மாதிரி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Ragi Semiya Upma Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் காலையில் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? ஒரு மாற்றத்திற்கு உப்புமா செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உப்புமா என்றால் அலறி அடித்து ஓடுவார்களா? அப்படியானால் வீட்டில் ராகி சேமியா இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் உப்புமா செய்யுங்கள்.
இந்த மாதிரி உப்புமா செய்தால், பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக டயட்டில் இருந்தால் ராகி சேமியாவை அடிக்கடி உட்கொள்வது நல்லது. ஏனெனில் எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரியும். அதோடு இது உடலை வலுவாக வைத்துக் கொள்ளவும் உதவும். ராகி சேமியா உப்புமாவை ருசியாக செய்ய தெரிந்து கொண்டால், பின் காலை உணவை டக்கென்று தயார் செய்யலாம். முக்கியமாக இது பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ராகி சேமியா உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி சேமியா உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி சேமியா - 1 பாக்கெட்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ராகி சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீரை ஊற்றி, 2
முறை அலச வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, இட்லி தட்டில் போட்டு,
இட்லி பாத்திரத்தினுள் வைத்து 7 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் வேக வைத்த ராகியை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துவிட்டு, குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி கண்ணாடி பதத்திற்கு வெங்காயத்தை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம் மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் துருவிய தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, வேக
வைத்துள்ள ராகி சேமியாவை சேர்த்து, நன்கு கிளறி விட்டு இறக்கினால்,
சுவையான ராசி சேமியா உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications