Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
உருளைக்கிழங்கை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி மஞ்சூரியன் செய்யுங்க... குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்...
Potato Manchurian Recipe in Tamil: அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்குதான். மற்ற காய்கறிகளை விட உருளைக்கிழங்கைதான் அதிகமான வழிகளில் சமைக்கலாம். பொதுவாக உருளைக்கிழங்கை பொரியல் செய்தோ, குழம்புகளில் சேர்த்தோ சில சமயங்களில் அசைவ உணவுகளில் கூட சேர்த்து சமைக்கலாம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் உருளைக்கிழங்கை வைத்து சைனீஸ் ஸ்டைலில் அட்டகாசமான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செய்துள்ளீர்களா? இந்த சூப்பரான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செய்வதற்கு எளிதாகவும், சுவையில் கோபி மஞ்சூரியன் போலவே இருக்கும். இந்த சூப்பரான உருளைக்கிழங்கு மஞ்சூரியனை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- 4 உருளைக்கிழங்கு
- ¼ கப் சோள மாவு
- ¼ கப் மைதா மாவு
- 1 பெரிய வெங்காயம்
- ½ கப் குடை மிளகாய்
- 2 பூண்டு பல்
- 1 ஸ்பூன் சோயா சாஸ்
- 1 ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
- 1 ஸ்பூன் கிரீன் சில்லி சாஸ்
- 1 ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
- 2 ஸ்பூன் வினிகர்
- ¼ ஸ்பூன் மிளகு தூள்
- ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு வெங்காயத்தாள்
செய்முறை:
- முதலில் வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, மற்றும் வெங்காயத்தாளை நறுக்கி, உருளைக்கிழங்கை பிடித்த வடிவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் தேவையான அளவு மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியாக கரைத்து கொள்ளவும்.
- பின்னர் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து இதில் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும்.
- எண்ணெய் சூடேறியதும் அதில் உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி எண்ணெயை வடிகட்டவும்.
- அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர், மற்றும் கெட்சப்பை ஊற்றி அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- 1 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும் சேர்த்து அதை கடாயில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
- பின்னர் உப்பை சரிபார்த்து தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
- அடுத்து பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.
- பின்னர் அதில் சிறிதளவு வெங்காயத்தாளை தூவி கிளறி அடுப்பை அணைத்தால் சூப்பரான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி.



Click it and Unblock the Notifications
