Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சுவையான... கேரட் சட்னி
கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால், அடிக்கடி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கேரட்டை பொரியல் செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இனிமேல் கேரட் சட்னி செய்து சுவையுங்கள்.
உங்களுக்கு இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக கேரட் சட்னியை செய்து பாருங்கள். கேரட் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, அடையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால், அடிக்கடி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கேரட்டை பொரியல் செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இனிமேல் கேரட் சட்னி செய்து சுவையுங்கள்.

கேரட் சட்னியை இரண்டு முறையில் தயாரிக்கலாம். ஒன்று தேங்காய் சேர்த்து செய்யலாம். மற்றொன்று வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து செய்யலாம். உங்களுக்கு கேரட் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் கேரட் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய கேரட் - 1 கப்
* தேங்காய் - 1/4 கப்
* சின்ன வெங்காயம் - 4
* பச்சை மிளகாய் - 7-8
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 இன்ச்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் சின்ன வெங்காயம், கேரட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.
குறிப்பு:
* கேரட் சட்னியில் இனிப்பு அதிகம் தெரியக்கூடாது என்றால், பச்சை மிளகாயை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சின்ன வெங்காயம் இல்லாவிட்டால், பாதி பெரிய வெங்காயத்தை பயன்படுத்துங்கள்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications