Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குடைமிளகாய் சாம்பார்
அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். குடைமிளகாயை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் ஒன்று தான் குடைமிளகாய் சாம்பார்.
குடைமிளகாயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த காய்கறி செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடியது. எனவே அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். குடைமிளகாயை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் ஒன்று தான் குடைமிளகாய் சாம்பார். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 1-2
* துவரம் பருப்பு - 1/2 கப்
* பெரிய வெங்காயம் - 1
* தக்காளி - 1/2
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் சாம்பார் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் புளியை கையால் பிசைந்து, வடிகட்டி அந்நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
* இறுதியாக வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாம்பார் தயார்.
Image Courtesy: pavispassion



Click it and Unblock the Notifications