Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி
இன்று உங்கள் வீட்டில் இட்லியா? இந்த இட்லிக்கு வித்தியாசமான, அதே நேரம் மிகவும் சுவையான ஒரு சட்னி செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் இட்லியா? இந்த இட்லிக்கு வித்தியாசமான, அதே நேரம் மிகவும் சுவையான ஒரு சட்னி செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி செய்யுங்கள். குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
* வேர்க்கடலை - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 3-4
* பூண்டு - 1 பெரிய பல்
* புளி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை மற்றும் பச்சை மிளாகய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் கொத்தமல்லி, பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு சிறிது வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
