Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Wheat Rava Kichadi Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் கிச்சடியை செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் கோதுமை ரவை இருந்தால், அத்துடன் விருப்பமான காய்கறிகளை சேர்த்து கிச்சடி செய்யுங்கள்.
இப்படி கிச்சடி செய்யும் போது, அது மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்கும். முக்கியமாக கிச்சடி ருசியாக இருக்க கடைசியாக ஒரு பொருளை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி சேர்ப்பதன் மூலம், கிச்சடி ருசியாகவும், மணமாகவும் இருக்கும். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உங்களுக்கு கோதுமை ரவா கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கோதுமை ரவை - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும்
நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கோதுமை ரவையை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவி சேர்த்து கிளறி, 2
1/2 கப் நீரை ஊற்றி கிளறி உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பை
சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி, 1 டீஸ்பூன்
நெய் சேர்த்து கிளறினால், சுவையான கோதுமை ரவா கிச்சடி தயார்.



Click it and Unblock the Notifications