Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க
Bengali Veg Pulao Recipe in Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் சுவையான ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், கொஞ்சம் காய்கறியும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி பெங்காலி ஸ்டைல் வெஜிடபிள் புலாவை செய்து பாருங்கள்.

இந்த பெங்காலி வெஜ் புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான வெஜ் புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகள் காய்கறி சாப்பிடாதவர்கள் என்றால் இந்த ஸ்டைலில் செய்யும் போது அவர்கள் கூட காய்கறிகளை சாப்பிடுவார்கள். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு பெங்காலி ஸ்டைல் வெஜ் புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி ஸ்டைல் வெஜ் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 2 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 3 பச்சை மிளகாய் ( கீறியது)
- 10 முந்திரிப் பருப்பு
- 10 உலர் திராட்சை
- 2 ஏலக்காய்
- 1 கருப்பு ஏலக்காய்
- 1 இன்ச் பட்டை
- 3 கிராம்பு
- ¼ கப் நறுக்கிய கேரட்
- ¼ கப் பச்சை பட்டாணி
- ½ கப் காலிஃபிளவர் துண்டுகள்
- ¼ கப் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு
- ¼ கப் நறுக்கிய பீன்ஸ்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் சர்க்கரை
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- அரிசியை நன்றாக கழுவோ பின்னர் 3 கப் நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- ஒரு கடாயில் நெய்யை ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும்.
- நெய் சூடானதும், அதில் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொரியவிடவும்.
- முந்திரி மற்றும் உலர் திராட்சையைச் சேர்த்து, லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும்.
- பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து 3-4 வினாடிகள் வதக்கவும்.
- இப்போது கேரட், பட்டாணி, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து, அடிக்கடி கிளறிக்கொண்டே 3-4 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- அரிசியிலிருந்து நீரை வடித்துவிட்டு, ஊறவைத்த அரிசியுடன் எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை மற்றும் 2 கப் தண்ணீர் ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்க்கவும்.
- பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அரிசி அனைத்து நீரையும் உறிஞ்சி மென்மையாகும் வரை அப்படியே வைக்கவும்.
- அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வைத்து, சாதத்தை 5 நிமிடங்கள் அப்படியே ஆறவிடவும்.
- மூடியைத் திறந்து, ஒரு கரண்டியை திருப்பி வைத்து சாதத்தை மெதுவாகக் கிளறிவிட்டு, சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
