Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த சூப்பை தினமும் குடிச்சிட்டு வந்தீங்கனா எடையும் வேகமாக குறையும், சருமமும் தங்கம் மாதிரி ஜொலிக்கும்...!
Beetroot Soup Recipe in Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் உள்ளீர்களா? உங்களின் டயட்டில் உள்ள பெரும்பாலான உணவுகள் சுவையில்லாமல் மோசமாக இருக்குமா? இதனாலேயே உங்கள் நாக்கு செத்து போயுள்ளதா? எடையைக் குறைக்க பெரும்பாலான நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஒரு முக்கியமான உணவு சூப் வகைகளாகும்.
உங்களின் எடையைக் குறைக்கும் டயட்டிற்கு ஏற்ப ஒரு அருமையான காலை உணவாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு சூப் உள்ளது. இது உங்கள் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி இரத்தத்தை சுத்திகரித்து சருமத்தை பொலிவுறச் செய்யும். அதுதான் பீட்ரூட் சூப். இந்த சூப் புரோட்டீன் அதிகம் நிறைந்தது. உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் கொண்டது. இந்த சூப்பை தினமும் காலையில் 1 கப் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, உங்கள் தோற்றத்திலும் நல்ல மாற்றத்தை உணரலாம்.

உங்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் சூப்-ன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் - 1
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 300 மில்லி
- பச்சை மிளகாய் - 1
- கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
- பூண்டு - 2 பல்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- இஞ்சி - சிறிதளவு
- நெய் - 2 தேக்கரண்டி
- மிளகு - 1/2 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பீட்ரூட்டை தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு, கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நசுக்கவும் அல்லது மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் நெய்யை ஊற்றி காயவைத்து, மிளகு, சோம்பு, பிரியாணி இலை ஆகியவை சேர்த்து தாளிக்கவும்.
- அத்துடன் அரைத்தப் பொருட்களைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் பருப்பு வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
- குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து வடிகட்டி, சூடாகப் குடித்தால் சூப்பரான பீட்ரூட் சூப் ரெடி!
- இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் எடை வேகமாக குறையும் மற்றும் சருமமும் தங்கம் போல ஜொலிக்கும்.



Click it and Unblock the Notifications