Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும்
Aval Pakoda Recipe in Tamil: தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மழை பெய்யும் போது சூடான நொறுக்குத்தீனி சாப்பிடுவது என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. மாலை நேரத்தில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் மொறுமொறுவென்று சூடாக சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலை வைத்து வித்தியாசமான சுவையில் பக்கோடா செய்து கொடுங்கள்.

இந்த அவல் பக்கோடா செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் சுவையானதும் கூட, மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த அவல் பக்கோடா நீங்கள் வழக்கமாக சாப்பிடும் பக்கோடா போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக, மொறுமொறுவென்று இருக்கும்.
உங்களுக்கு சுவையான அவல் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் அவல்
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 உருளைக்கிழங்கு, வேகவைத்து நறுக்கியது
- அரை ஸ்பூன் துருவிய இஞ்சி
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கியது
- 1 கொத்து கறிவேப்பிலை, நறுக்கியது
- ¼ ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- ¼ ஸ்பூன் ஓமம்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் உடைத்த வேர்க்கடலை
- 3 ஸ்பூன் கடலை மாவு
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
செய்முறை:
- முதலில், ஒரு கப் அவலைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கழுவவும். அவலை ஊற வைக்கக்கூடாது, அலசினாலே போதும்.
- தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, அவலில் உள்ள நீர் முழுவதும் வெளியேறும் வகையில் அதை 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- பின்னர் வடிகட்டிய அவலை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும்.
- இந்த அவலில் நறுக்கிய பெரிய வெங்காயம், வேகவைத்த 1 உருளைக்கிழங்கு, ½ ஸ்பூன் துருவிய இஞ்சி, 2 மிளகாய், 2 ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் ¼ ஸ்பூன் மிளகாய்த்தூள், ¼ ஸ்பூன் ஓமம் மற்றும் ½ ஸ்பூன் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அதன்பின் 2 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை மற்றும் 3 ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும்.
- இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கைகளால் கலக்கவும், குறிப்பாக உருளைக்கிழங்கை நன்றாக மசிக்க வேண்டும்.
- இப்போது கைகளில் எண்ணெய் தடவி, சிறு உருண்டைகளாகத் தயார் செய்யவும்.
- சூடான எண்ணெயில் ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- எண்ணெயை வடிகட்டி தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.



Click it and Unblock the Notifications