Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
ஆந்திரா உள்ளி கார சட்னி ரெசிபி... இந்த மாதிரி அரைச்சு பாருங்க... எல்லாரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!
Andhra Ulli Kara Chutney Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? சற்று காரமான அதே சமயம் சுவையான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் கார சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
ஒருமுறை இந்த சட்னியை அரைத்து விட்டால் அதன்பிறகு இட்லி, தோசை என்றாலே உங்களுக்கு இந்த சட்னிதான் நியாபகத்திற்கு வரும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஒரு சில பொருட்களே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் அதேசமயம் சுவையாகவும் இருக்கும். பெரும்பாலான ஆந்திர ஹோட்டல்களில் இந்த சட்னி நிச்சயம் பரிமாறப்படும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 2 பச்சை மிளகாய்
- 2 சிவப்பு மிளகாய்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 5 பூண்டு பல்
- 2 வெங்காயம்
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- சிறிதளவு புளி
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிவப்பு மிளகாய்
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி விதைகள், பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் பூண்டை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் உப்பு, புளி, சீரகம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.
- இதை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
-- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீதி கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா உள்ளி கார சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications