Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மட்டன் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... டேஸ்ட் சும்மா வேற லெவலில் இருக்கும்...!
Andhra Style Mutton Gravy Recipe in Tamil: இந்த வாரம் ஞாயிறுக் கிழமை உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வழக்கம் போல இல்லாமல் வித்தியாசமான சுவையில் மட்டனை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஆந்திரா ஸ்பெஷல் வறுத்தரைச்ச மட்டன் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.
இந்த ஆந்திரா ஸ்பெஷல் வறுத்தரைச்ச மட்டன் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

இந்த ஆந்திர ஸ்பெஷல் மட்டன் கிரேவி வழக்கமான மட்டன் குழம்பு போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். மட்டனை ஊறவைத்து மசாலாவை தனியாக அரைத்து செய்யப்படும் இந்த குழம்பு உங்கள் ஞாயிறுக் கிழமையை சூப்பரானதாக மாற்றும். இந்த பதிவில் சூப்பரான ஆந்திர ஸ்பெஷல் மட்டன் குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஊற வைக்க:
- ஆட்டு கறி - 1/2 கிலோ
- மஞ்சள் தூள் - சிறிது
- மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
- தயிர் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய் - 1/2 மூடி
- சோம்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- வர மல்லி - 1 தேக்கரண்டி
- வர மிளகாய் - 1 தேக்கரண்டி
- முந்திரி - 5
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - 1 துண்டு
- கொத்தமல்லித் தழை - சிறிது
- தக்காளி - 1
- வெங்காயம் - 1
தாளிக்க:
- எண்ணெய் - தாளிக்க
- பட்டை - 2
- கிராம்பு - 4
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
- கடுகு - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 3
- நறுக்கிய பெரிய வெங்காயம் - பாதி
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் மட்டனை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். கறியுடன் ஊற வைக்க கொடுத்த பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும்.
- இந்த பொருட்களை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்
- குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கறி, அரைத்து வைத்துள்ளவற்றில் வெங்காயம் மற்றும் தக்காளி தவிர மசாலாவை சேர்க்கவும்.
- இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு 6 விசில் வரை விடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பின்னர் பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கிய பாதி வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த வெங்காயத்தையும் சேர்க்கவும்.
- இப்போது குக்கரில் வெந்த கறி கரைசலை கடாயில் ஊற்றி 5 நிமிடம் கிளறவும்.
- பின் அரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை ஊற்றி பச்சை வாசம் போகும்படி 10 நிமிடம் கொதிக்க வைத்து வீட்டுக்கு கொத்தமல்லி தலை தூவினால் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி.
இது சூடான் சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
