Latest Updates
-
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா இவங்க மட்டன் மட்டும் சாப்பிடுவாங்க -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
Andhra Style Cauliflower Fry Recipe in Tamil: காலிஃபிளவர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காலிப்ளவர் சில்லிதான். அனைவருக்கும் பிடித்த உணவுகளில் இந்த காலிஃபிளவர் சில்லி எப்போதும் முக்கியமான இடத்தில் இருக்கும். ஆனால் இது எண்ணெயில் பொரிக்கப்படும் உணவாக இருப்பதால் இது அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்காது. காலிஃபிளவரை ஆரோக்கியமாக சமைக்க விரும்பினால் இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபிளவர் பொரியலை ட்ரை பண்ணி பாருங்க.

காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலிப்ளவர் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் என அனைத்திற்கும் சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் காலிஃபிளவர் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் காலிஃபிளவர் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைக்க:
- 1 காலிஃபிளவர்
- வேகவைக்க தேவையான நீர்
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
அரைக்க:
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- ½ ஸ்பூன் எள்
- 1 ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன்வறுத்த வேர்க்கடலை
- தேவையான அளவு உப்பு
- 2 பல் பூண்டு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ கப் நறுக்கிய வெங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
செய்முறை:
- காலிஃபிளவரை முதலில் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் நறுக்கிய காலிஃபிளவர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். சிறிது மென்மையாகும் வரை 5 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து, உலர வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் அரைக்க வேண்டிய அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய காலிஃபிளவரைச் சேர்த்து, மிதமான தீயில் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, காலிஃபிளவர் மீது மசாலா நன்கு ஒட்டும் வகையிலும், மசாலாவின் வாசனை வரும் வரையிலும் வதக்கவும்.
- மசாலா நன்கு ஒட்டியதும் அடுப்பை நன்கு அணைத்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் காலிஃபிளவர் பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications
