Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
குழந்தைகளுக்கு ஏற்படும் 6 வகையான இரத்த சோகைகளும்.. அவற்றின் முக்கிய அறிகுறிகளும்..
Anemia In Children In Tamil: இரத்த சோகை (அனீமியா) என்பது பொதுவாக பெரியவர்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. இரத்த சோகை என்பது குழந்தைகளுக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. இந்த இரத்த சோகையால் அமெரிக்காவில் சுமார் 20% குழந்தைகள் பாதிப்படைகின்றனர்.
இரத்த சோகை என்பது உங்கள் குழந்தைகளுக்கு போதுமான ஹீமோகுளோபின் இல்லை என்பதை காட்டுகிறது. ஹீமோகுளோபின் என்பது ஒரு வகை புரதமாகும். இது இரத்த சிவப்பணுக்களை உடலில் உள்ள மற்ற செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகையில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றை பற்றி இக்கட்டுரையில் நாம் விரிவாக காண்போம்.

இரத்த சோகையின் வகைகள்
1. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை
குழந்தைகளுக்கு இரத்தத்தில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாததை இது காட்டுகிறது. ஏனெனில் ஹீமோகுளோபின் உருவாகுவதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். எனவே இரத்த சோகைக்கு இது ஒரு காரணியாக அமைகிறது.
2. மெகாலோபிளாஸ்டிக் அனீமியா
இந்த வகை இரத்த சோகை ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி-12 இல்லாமல் இரத்த சிவப்பணுக்கள் மிகவும் பெரியதாக இருக்கும் போது ஏற்படுகிறது. மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவின் ஒரு வகை தான் பெர்னிசியஸ் அனீமியா ஆகும். இந்த அனிமியாவில் வைட்டமின் பி-12 யை உறிஞ்சுவதில் சிக்கல் உண்டாகிறது. இந்த வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானது.
3. ஹீமோலிடிக் அனீமியா
இது சிவப்பு இரத்த அணுக்கள் அழிக்கப்படும் போது ஏற்படுகிறது. தீவிர நோய்த்தொற்றுகள், சில மருந்துகளால் ஏற்படுகிறது.
4. அரிவாள் செல் அனிமியா
இது ஒரு வகை ஹீமோகுளோபினோபதி ஆகும். இது அசாதாரண வடிவிலான சிவப்பு ரத்த அணுக்கள் கொண்ட பரம்பரை வகை இரத்த சோகை ஆகும்.
5. தலசீமியா
இது அசாதாரண இரத்த சிவப்பணுக்கள் கொண்ட மற்றொரு பரம்பரை வகை இரத்த சோகை ஆகும்.
6. அப்லாஸ்டிக் அனீமியா
இது எலும்பு மஜ்ஜை இரத்த அணுக்களை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படுவதால் உண்டாகிறது.
குழந்தைக்கு இரத்த சோகை ஏற்பட என்ன காரணம்?
* இரத்த சிவப்பணுக்களின் இழப்பு
* போதுமான இரத்த சிவப்பணுக்கள் உருவாகாமல் போதல்
* இரத்த சிவப்பணுக்கள் அழிந்து போதல்
* இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைதல்
* பரம்பரை இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு
* நோய்த்தொற்றுகள்
* சில நோய்கள் ஏற்படுதல்
* குழந்தை எடுத்துக் கொள்ளும் சில வகை மருந்துகள்
* உணவில் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாமல் போதல்
எந்த வகை குழந்தைகள் அனிமியாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது?
* முன்கூட்டிய அல்லது குறைந்த எடை குழந்தைகள்
* வறுமையின் பிடியில் வாழும் குழந்தைகள் அல்லது வறுமை நாட்டில் இருக்கும் குழந்தைகள்
* அதிகமான பசுவின் பால் குடிக்கும் குழந்தைகள்
* இரும்புச்சத்து அல்லது சில வைட்டமின்கள் அல்லது தாதுக்கள் குறைந்த உணவு
* விபத்தில் அல்லது அறுவை சிகிச்சையில் அதிகளவு இரத்த இழப்பு ஏற்படுதல்
* நோய்த்தொற்றுகள் அல்லது சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய் போன்ற நீண்ட கால நோய்கள் ஏற்படுதல்
* அரிவாள் இரத்த சோகை போன்ற பரம்பரை இரத்த சோகை கொண்ட குழந்தைகள்
குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகை நோயின் அறிகுறிகள்
இரத்த சோகை பெரும்பாலான உயிரணுக்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு இரத்த சோகை இருந்தால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிக்காட்டும்.
* இதயத் துடிப்பு அதிகரித்தல்
* மூச்சுத் திணறல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம்
* ஆற்றல் இல்லாமல் போதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல்
* எளிதில் சோர்வடைந்து போதல்
* தலைசுற்றல்
* தலைவலி
* எரிச்சல்
* ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள்
* மாதவிடாய் தாமதம் ஆகுதல்
* புண் அல்லது வீங்கிய நாக்கு
* தோல் வெளிரிப் போதல்
* தோல், கண்கள் மற்றும் வாய் மஞ்சள் நிறமாதல்.
* விரிவாக்கப்பட்ட மண்ணீரல் அல்லது கல்லீரல்
* மெதுவான அல்லது தாமதமான வளர்ச்சி
* மோசமான காயம் மற்றும் திசு குணமாகுவதில் பிரச்சினைகள் ஏற்படுதல்
குழந்தைக்கு ஏற்படும் இரத்த சோகைக்கு ஏற்ற சிகிச்சை முறைகள்
* சில வகை இரத்த சோகை சிகிச்சைக்கு மருந்து, இரத்த மாற்றம், அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெம்செல் அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.
* மருத்துவரின் பரிந்துரை பேரில் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் வைட்டமின் டானிக் பரிந்துரைக்கப்படுகிறது.
* குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்
* இரத்த சோகையை ஏற்படுத்தும் மருந்தை நிறுத்த வேண்டும்.
* இரத்த மாற்றம் செய்யலாம்
* ஸ்டெம் செல் அறுவை சிகிச்சைகள் செய்யலாம்.
மேற்கண்ட சிகிச்சை முறைகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications