பெண்களே! உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கு இவைதான் காரணமாம்...ஜாக்கிரதையா இருங்க..!

கர்ப்ப காலத்தில் பல வகையான உணவு நச்சுகள் கருச்சிதைவு அல்லது கர்ப்ப இழப்புக்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.

கர்ப்பம் தரிக்கும்போது, எல்லா பெண்களும் அளவில்லா ஆனந்தம் கொள்கிறார்கள். அவர்களின் குடும்பமே மகிழ்ச்சியில் கொண்டாடுவார்கள். பிரசவம் ஆகும் வரை கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், பல கர்ப்பங்கள் கருச்சிதைவில் முடிவடையக்கூடும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் அபாயங்களைப் பற்றி நீங்கள் கவலையடையலாம் மற்றும் பயம்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில், கருச்சிதைவு உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக நிகழ்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆதலால், கருத்தரித்த பெண்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Pregnancy: causes of miscarriage and reduce its risk in tamil

உண்மையில், கருச்சிதைவுக்கான சரியான காரணத்தைக் குறிப்பிடுவது பெரும்பாலும் கடினம். இருப்பினும், கருச்சிதைவுக்கான பொதுவான காரணங்களைத் தெரிந்துகொள்வது ஆரோக்கியமான மற்றும் பலனளிக்கும் கர்ப்பத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை நிதானப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவும். இக்கட்டுரையில், கருச்சிதைவுக்கான உண்மையான காரணங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசாதாரண குரோமோசோம்கள்

அசாதாரண குரோமோசோம்கள்

குழந்தையின் குரோமோசோம்களின் அசாதாரண எண்ணிக்கையானது முதல் 12 வாரங்களில் நடக்கும் கருச்சிதைவுகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு காரணமாகும். குரோமோசோம்கள் உங்கள் குழந்தையின் தலைமுடி மற்றும் கண் நிறம் போன்ற தனித்துவமான பண்புகளை தீர்மானிக்கின்றன. சேதமடைந்த அல்லது தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்கள் உங்கள் குழந்தையின் சரியான வளர்ச்சியை பாதிக்கிறது. நீங்கள் வயதாகும்போது, குறிப்பாக 35 வயதிற்குப் பிறகு, குரோமோசோமால் பிரச்சனைகள் மற்றும் கர்ப்ப இழப்புக்கான உங்கள் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.

மருத்துவ பிரச்சினைகள்

மருத்துவ பிரச்சினைகள்

கர்ப்பத்தை முழு காலத்திற்கு எடுத்துச் செல்வதில் தாயின் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரூபெல்லா அல்லது சைட்டோமெலகோவைரஸ் போன்ற தொற்று, எச்.ஐ.வி அல்லது சிபிலிஸ், தைராய்டு நோய் மற்றும் ஆட்டோ இம்யூன் கோளாறுகள் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் உட்பட தாயின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக கருச்சிதைவு ஏற்படலாம். மேலும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நிலைமைகள் சரியான முறையில் நிர்வகிக்கப்படாவிட்டால் கர்ப்பத்தில் சிக்கல்களை உருவாக்கலாம். உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர, உங்கள் பழக்கவழக்கங்களும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கலாம். புகைபிடித்தல், அதிக மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத மருந்துகளைப் பயன்படுத்துதல் ஆகியவை கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

மருந்துகள்

மருந்துகள்

வலி மற்றும் வீக்கத்திற்கான ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID), முடக்கு வாதம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், அரிக்கும் தோலழற்சி மற்றும் சில தோல் நிலைகள் உட்பட பல ஓவர்-தி-கவுன்டர் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கருச்சிதைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

சுற்றுச்சூழல் அபாயங்கள்

சுற்றுச்சூழல் அபாயங்கள்

புகைபிடிப்பதைத் தவிர, வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ உங்கள் சூழலில் உள்ள சில பொருட்களால் உங்கள் கர்ப்பம் ஆபத்தில் உள்ளது. பூச்சிகளை கொல்வதற்கான இராசயன பூச்சிக்கொல்லிகள், பெயிண்ட் தின்னர்கள் அல்லது வீடுகளில் பெயிண்ட் போன்ற கரைப்பான்கள் மற்றும் பழைய தண்ணீர் குழாய்களில் இருக்கும் ஈயம் போன்றவை கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம். ஆதலால், நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

உணவு விஷம்

உணவு விஷம்

கர்ப்ப காலத்தில் பல வகையான உணவு நச்சுகள் கருச்சிதைவு அல்லது கர்ப்ப இழப்புக்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்க காரணமாக இருக்கலாம். பொதுவானவை சால்மோனெல்லா, இவை பச்சை அல்லது வேகவைக்கப்படாத முட்டைகளில் காணப்படும். டோக்ஸோபிளாஸ்மோசிஸ் ஆகியவை பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மூல இறைச்சியை சாப்பிடுவதால் ஏற்படும். ஆதலால், உங்கள் சிசுவுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கர்ப்பகாலத்தில் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

கருச்சிதைவைத் தடுப்பதற்கான குறிப்புகள்

கருச்சிதைவைத் தடுப்பதற்கான குறிப்புகள்

சில செயல்பாடுகள் அல்லது உணர்ச்சிகள் உங்கள் கர்ப்பத்தின் அபாயத்தை உயர்த்தக்கூடும் என்று கவலைப்படுவது இயல்பானது. இருப்பினும், உங்கள் கர்ப்பம் அதிக ஆபத்தாகக் கருதப்படாவிட்டால், வேலை, உட்கார்ந்து அல்லது குறைந்தளவு நேரம் நிற்பது, விமானப் பயணம், உடலுறவு, உடற்பயிற்சி, உணர்ச்சி அதிர்ச்சி அல்லது மிதமான அளவு மன அழுத்தம் போன்ற பெரும்பாலான வழக்கங்களும் உங்கள் கர்ப்பத்தை பாதிக்கலாம். ஆதலால், எந்த செயல்பாட்டின்போதும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, January 30, 2023, 18:00 [IST]
Desktop Bottom Promotion