Latest Updates
-
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
கர்ப்பிணி உயரம் குறைவு காரணமாக குறைப்பிரசவம் அதிகம் ஏற்படுகிறதா?
தாய் உயரம் குறைவாக இருந்தால் பிறக்கும் குழந்தையும் உயரம் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் நீண்ட காலமாகவே பலரது மனதில் இருந்து வருவது. ஆனால், இதற்கு எதிர்மாறாக குழந்தைகள் உயரமாக வளர்வதும் நாம் நிஜத்தில் கண்டிருக்கிறோம்.
ஆனால், சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், கருவுற்றிருக்கும் பெண் உயரம் குறைவாக இருப்பது, குழந்தை நலனுக்கும், பிரசவத்தின் போதும் கூட பிரச்சனையாக இருக்குமா என்பது குறித்து நடத்தப்பட்டு, ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது....

3,500 தாய்மார்கள் மற்றும் குழந்தைகள்
PLoS என்ற இதழில் வெளிவந்த இந்த ஆய்வில் 3,500 தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கெடுத்துக் கொண்டனர்.

குறைப்பிரசவம்
உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு தான் நிறைய குறைப்பிரசவம் ஏற்படுவதாக இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். மற்றும் குழந்தைகளும் மிகவும் சிறியதாக முழு வளர்ச்சி இன்றி பிறப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மரபணு தான் காரணம்
உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவது அல்லது பிறக்கும் குழந்தை முழு வளர்ச்சியின்றி பிறப்பதற்கு அவர்களது மரபணு தான் காரணம் என்று தெரியவந்துள்ளது என்று இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் லூயிஸ் கூறியுள்ளார். மற்றும் இது வியப்பாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆரோக்கியம்
தாயின் மரபணு மட்டுமின்றி, பிரசவ காலத்தில் அவர் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துகள் மற்றும் ஆரோக்கிய நலன் போன்றவையும் கூட இதற்கு காரணமாக இருக்கிறது. தாயின் ஊட்டச்சத்துக்கள் காரணமாக தான் ஓர் குழந்தை நல்ல நலத்துடன் வளர்கிறது. எனவே, இதை உணர்து தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

சுற்றுசூழல்
ஓர் தாய் கருவில் குழந்தையை எவ்வளவு தாங்க முடியும், சுமக்க முடியும் என்பதை, அவரது உயரத்தை விட, ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் சுற்றுசூழல் எல்லாம் தான் முக்கிய காரணியாக இருக்கின்றன.



Click it and Unblock the Notifications