Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
இரண்டாவது மூன்றுமாத காலத்தில் கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!
கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தை விட இரண்டாவது மூன்றுமாத காலத்தில் உடலளவில் மற்றும் மனதளவில் சிறிது மாற்றத்தை சந்திப்பார்கள். ஏனெனில் இக்காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியானது அதிகமாக இருக்கும். இதனால் வயிற்றின் அளவானது விரிவடைய ஆரம்பித்து, வயிறு பெரிதாக ஆரம்பிக்கும்.
மேலும் இக்காலத்தில் சோர்வு அதிகம் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இரண்டாவது மூன்றுமாத காலத்தில் கர்ப்பிணிகளின் உடலில் ரிலாக்ரின் என்னும் பிரசவ காலத்திற்கு தயாராகுமாறு மூட்டுக்களை தளர்வடையச் செய்யும் ஹார்மோன் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் கர்ப்பிணிகளுக்கு உடலில் பிடிப்புக்கள் மற்றும் வலி ஏற்பட ஆரம்பித்து, உடலின் எனர்ஜியானது குறைய ஆரம்பிக்கும்.
இதுப்போன்று வேறு சில: கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்...
எனவே கர்ப்பிணிகள் இக்காலத்தில் ஒருசில உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், உடலில் ஏற்படும் சோர்வுகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் சீராக இருக்கும். ஆனால் கர்ப்பிணிகள் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யும் முன்னும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இங்கு இரண்டாவது மூன்றுமாத காலத்தில் கர்ப்பிணிகள் செய்யக்கூடிய ஒருசில சிம்பிளான உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிடித்ததை செய்து வாருங்கள்.

நடைப்பயிற்சி
இரண்டாவது மூன்றுமாத காலத்தில் கர்ப்பிணிகள் செய்யக்கூடிய உடற்பயிற்சி தான் நடப்பது. தினமும் காலை அல்லது மாலையில் சிறிது நேரம் நடக்கும் போது, சுத்தமான காற்றினை சுவாசிப்பதால், மனமானது மிகவும் சந்தோஷமாகவும், ரிலாக்ஷாகவும் இருக்கும். ஒருவேளை தொடர்ச்சியாக நடக்கும் போது மிகவும் சோர்வாக இருந்தால், சிறிது நேரம் ஓய்வு எடுத்து நடக்க ஆரம்பிக்கலாம்.

தியானம்
கர்ப்பிணிகள் தினமும் தவறாமல் தியானம் செய்து வர வேண்டும். இதனால் மனம் மற்றும் உடல் அமைதியாகி, உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

யோகா
கர்ப்பிணிகள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளில் மிகவும் சிறந்தது தான் யோகா. இதனால் உடல் ரிலாக்ஸ் அடைவதோடு, வலுவுடனும் இருக்கும். குறிப்பாக யோகா செய்யும் போது அடிவயிற்று தசை அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெட்ச் ஆகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை யோகாவை செய்ய உங்களால் முடியாவிட்டால், செய்யாமல் இருப்பது நல்லது.

நீச்சல்
பொதுவாக கர்ப்பிணிகள் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால், அவர்களுக்கு இதமாக இருக்கும். ஏனெனில் நீந்தும் போது, அவர்களது உடல் பருமன் அவர்களுக்கு தெரியாததால், நீந்துவது வசதியாக இருப்பதுடன், உடல் வலிக்கு இதமாகவும் இருக்கும்.

வீட்டு வேலைகள்
வீட்டு வேலை கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி. எனவே தினமும் வீட்டில் எளிமையான சில வீட்டு வேலைகளை செய்வது சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். ஆனால் கடினமாக வேலைகள் மற்றும் அதிகமான எடையுள்ள பொருட்களைத் தூக்க வேண்டாம்.

ஏரோபிக் உடற்பயிற்சி
ஏரோபிக் உடற்பயிற்சி கூட கர்ப்பிணிகளின் இரண்டாவது மூன்றுமாத காலத்தில் செய்வதற்கு பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் இந்த பயிற்சியை செய்வதால், இதயம் மற்றும் நுரையீரல் சீராக செயல்படும். ஆனால் இதனை செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பின் செய்ய வேண்டும்.

மாடி ஏறுவது
மாடிப்படிகள் ஏறுவது கூட ஒரு அருமையான உடற்பயிற்சி. எனவே அவ்வப்போது மாடிப்படி ஏறி இறங்கி வாருங்கள்.



Click it and Unblock the Notifications