Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பெண்கள் பிரா அணியலாமா? கூடாதா?
பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பிரா அணிதல், மார்பகங்களில் இறுக்கம் மற்றும் பால் கட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளையும், மார்பகத்தில் அழுத்தம் மற்றும் மார்பகம் சிவந்து போதல் போன்ற சரும பிரச்சனைக
குழந்தையை வெற்றிகரமாக பெற்று எடுத்த பின், அவர்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை. குழந்தை வளர்த்தலில் முக்கிய மற்றும் முதன்மை பங்கு வகிப்பது அன்னையே! ஏனெனில், குழந்தை பிறந்த தருணம் முதல் குழந்தை தானாக உணவுகளை உட்கொள்ளும் தருணம் வரை குழந்தைகளின் கூடவே இருந்து தாய்மார்கள் காட்டும் பாசமும் அன்பும் ஈடு இணையற்றது.

இந்த ஈடு இணையற்ற சேவையில் மிகவும் முக்கியமானது தாய்ப்பால் அளித்தல் தான். தாய் தன் இரத்தத்தை பாலாக்கி குழந்தைக்கு அளிக்கும் அந்த உன்னதமான செயல் மிகவும் பரிசுத்தமானது. இந்த பரிசுத்தமான செயலை ஆற்றுகையில் பெண்கள் பிரா என்னும் உள்ளாடையை அணியலாமா கூடாதா என்று இங்கு படித்து பயனடையலாம்.

அசௌகரியம்
பெண்கள் தங்கள் மார்பகங்களை நிலையாக வைத்துக் கொள்ள அணியப்படும் உள்ளாடை தான் பிரா. இந்த உள்ளாடையை பெண்கள் தாய்மையின் பொழுது, அதிலும் முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அணிந்தால் அது பெண்களின் மார்பகத்தில் ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பெண்ணின் மார்பகங்கள் பால் மணம் வீசும்; இந்த மணம் குறைய மார்பகங்கள் காற்றோட்டமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்; அதனால் இந்த சமயத்தில் பிரா அணிவதை தவிர்ப்பது நல்லது.

பாதுகாப்பானதா?
பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பிரா அணிதல், மார்பகங்களில் இறுக்கம் மற்றும் பால் கட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளையும், மார்பகத்தில் அழுத்தம் மற்றும் மார்பகம் சிவந்து போதல் போன்ற சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே, தாய்ப்பால் அளிக்கும் சமயத்தில் பெண்கள் பிரா அணிவதை தவிர்க்க வேண்டும்; இது பாதுகாப்பானது அல்ல.

நார்மல் பிரா Vs நர்சிங் பிரா
தாய்ப்பால் அளிக்கும் பொழுது நார்மல் பிராவினை அணியாமல் இருப்பது பாதுகாப்பானது; ஆனால், பிரா அணியாமல் எப்படி வெளியே செல்வது, மற்றவர் முன் இருப்பது என்ற கேள்விகள் - சந்தேகங்கள் உங்கள் மனதில் எழலாம். இந்த பிரச்சனைகளை போக்குவதற்கு தான் நர்ஸிங் பிரா என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை பிராக்களில் அதாவது சாதாரண பிரா மற்றும் நர்சிங் பிராக்களில், தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது நர்சிங் பிரா தான். அதற்கான காரணங்களை அடுத்த பத்தியில் படித்து பாருங்கள்!

நர்சிங் பிரா நல்லது - காரணங்கள்!
இந்த நர்சிங் பிராக்கள் பெண்களின் மார்பகத்தில் அதிக அழுத்தம் மற்றும் அசௌகரியம் கொடுக்காத வகையில், மார்பகத்தையும் தாய்ப்பால் சுரப்பையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் மிருதுவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதனை தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் தங்களின் வசதிக்கு, நிறத்திற்கு ஏற்ற, பொருந்தும் நர்சிங் பிராக்களை பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி உபயோகிக்கலாம்.

நர்சிங் பிராக்கள்
தாய்மார்கள் தங்களின் நிறம் மற்றும் தங்கள் வெளியே அணிந்து செல்லும் ஆடைகளின் நிறத்திற்கு ஏற்ற வகையில் நர்சிங் பிராக்களின் நிறங்களை தேர்வு செய்து தேவையான அளவு வாங்கி பயன்படுத்தலாம். இது சாதாரண பிராக்களில் இருப்பது எலாஸ்டிக் போன்று அமைந்து சருமத்தை அழுத்தாமல் மிகவும் மிருதுவாக இருக்கும். இது மார்பகத்தை முழுவதுமாக மூடும் வகையிலும், மார்பகத்தை அழுத்தாமல் நிலைப்படுத்தும் வண்ணமும் அமைக்கப்பட்டு இருக்கும்.
முக்கியமாக தாய்ப்பால் சுரப்பை தடை செய்யாமல், தடுத்து நிறுத்தாமல், தாய்ப்பால் சுரப்பிற்கு எந்தவித தொந்தரவும் தராமல் நல்ல ஒரு பாதுகாப்பை நர்சிங் பிராக்கள் வழங்குகின்றன.

பிராவுடன் உறங்கலாமா?
பொதுவாக இரவில் உள்ளாடைகளுடன், குறிப்பாக பிராவுடன் பரிந்துரைக்கப்படுவது இல்லை. ஏனெனில் உள்ளுறுப்புகள் இரவு தூங்கும் பொழுது சற்று நேரமாவது காற்றோட்டமாக எந்தவித அழுத்தமும் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக தான். சாதாரண நாட்கள் மற்றும் பெண்களுக்கே இந்த அறிவுரை அளிக்கப்படுகிறது என்றால், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கு சொல்லவா வேண்டும்.
கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இரவு உறங்கும் பொழுது பிரா அணியாமல், காற்றோட்டத்துடன் எந்தவித தொந்தரவும் அசௌகரியமும் இன்றி உறங்க வேண்டும்; குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

எப்படிப்பட்ட பிரா?
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எப்படிப்பட்ட நர்சிங் பிரா வாங்க வேண்டும் என்றால், உங்கள் மார்பகங்களுக்கு பொருந்தும் சரியான அளவு கொண்ட பிராவினை வாங்கி உபயோகிக்க வேண்டும்; மேலும் அது சரியாக பொருந்தக்கூடியதாகவும், அழுத்தம் அளிக்கததாகவும் இருக்க வேண்டும். பிராவினை தரமுள்ளதாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்; சற்று விலை கூடினாலும் பரவாயில்லை.

செலவல்ல முதலீடு!
ஏனெனில் இது உங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் நலத்தை காக்க நீங்கள் செய்யும் சிறு முதலீடு என்று எண்ணிக் கொள்ளுங்கள்! இந்த நர்சிங் பிராக்களில் பல வகைகள் உள்ளன; உங்களுக்கு பிடித்த, தேவையான வகைகளை சரியாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள்; கட்டாயம் சாதாரண பிரா பயன்படுத்துவதை தாய்ப்பால் அளிக்கும் சமயத்தில் தவிர்த்து, நர்சிங் பிராக்களை பயன்படுத்த முயலுங்கள்!



Click it and Unblock the Notifications