பருவமடைந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சனைகள் - பெற்றோர்களின் கவனத்திற்கும்!!!

பருவ வயதை எட்டிவிட்டாலே மனதில் மன்மத ஆசைகள் அரும்பு மீசையோடு முளைக்க ஆரம்பித்துவிடுகிறது. இன்றைய காலத்தில் பெண்களுக்கும் கூட. இதற்கு சமூக இணையத்தை ஒரு பக்கம் காரணம் காட்டினாலும் கூட. அதற்கு சரி இணையாக பெற்றோரின் கவனக் குறைவு மற்றும் பிள்ளைகள் பெற்றோரிடம் நெருங்கி பழகுவதை தவிர்த்தல் போன்றவையும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதில் ஏன் பருவம் எய்திய என குறிப்பிட்டு நாம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது எனில். பருவம் அடைவதற்கு முன்பு மனதளவிலும், உடலளவிலும் ஏற்படும் பிரச்சனைகளை விட, பருவம் அடைந்த பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு வீரியம் அதிகம். கொஞ்சம் விட்டால் கூட அது கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிடும்.

உதாரணமாக, பதின் வயதுக்கு மேல் அந்தரங்க உடல் பாகங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவ்விடம் சார்ந்து நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம், அதை பெற்றோரிடம் மறைத்தல் தவறு. மற்றும் தீயப் பழக்கங்கள், உடல் சார்ந்த விஷயங்கள் என சிலவற்றை பருவமடைந்த பிள்ளைகள் பெற்றோரிடம் மறைக்க கூடாது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அந்தரங்க பிரச்சனைகள்

அந்தரங்க பிரச்சனைகள்

ஆண்களை விட, பெண்களுக்கு தான் இது அதிகம், பூப்படைந்த நாளில் இருந்து அவர்களுக்கு அங்கு தொற்று சார்ந்த பிரச்சனைகள் நாட்கள் தள்ளி போதல் போன்ற பல பிரச்சனை ஏற்படும் இவற்றை சரியான நேரத்தில் பெற்றோரிடம் எடுத்துரைத்தால் சீரான சரியான தீர்வு காண இயலும்.

உடல் சார்ந்த விஷயங்கள்

உடல் சார்ந்த விஷயங்கள்

உடல் சார்ந்து எனப்படுவது இங்கு உணர்வு சார்ந்ததாகும். பருவமடைந்த பிறகு கட்டாயம் உடலில் உணர்வு ரீதியான மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் என பெற்றோர் பிள்ளைகள் இடமும், பிள்ளைகள் ஏன் இவ்வாறான மாற்றங்கள் ஏற்படுகிறது என பெற்றோரிடமும் கேட்டு அறிந்துக்கொள்வது அவசியம்.

தீயப் பழக்கம்

தீயப் பழக்கம்

நம்முன்னோர்கள் தீயப் பழக்கங்கள் வேண்டாம் என்றதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அவற்றில் முதன்மையானது, இவை உடலுறவையும் பாதிக்கும், இல்லற உறவுகளையும் பாதிக்கும் என்பதால் தான். எனவே, தீயப் பழக்கங்களினால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என பெற்றோர் பிள்ளைகளிடம் எடுத்துரைக்க வேண்டும். அதே போல, நட்பு வட்டாரத்தில் யாரேனும் உங்களை கட்டாயப்படுத்தினால் உங்கள் பெற்றோரிடம் அதை பற்றி கூற மறக்க வேண்டாம்.

உடலுறவு

உடலுறவு

முக்கியமாக நமது நாட்டில் பெற்றோர் பிள்ளைகளிடம் மறைக்கும் விஷயம் உடலுறவு சார்ந்த தகவல்கள். மொட்டையாக அது கூடாத விஷயம் எனும் போது தான் பிள்ளைகள் அதை தேடியும், அதில் ஈடுபடவும் முனைகிறார்கள். எனவே, இது போன்ற சூழல் ஏற்படும் போது, பெற்றோரிடம் கூறிவிடுவது நல்லது. மற்றும் பெற்றோர் உடலுறவு சார்ந்து பருவ வயதில் பிள்ளைகளுக்கு போதுமான அறிவை புகட்ட வேண்டியது அவசியம்.

மூன்றாம் நபருடனான பழக்கம்

மூன்றாம் நபருடனான பழக்கம்

மூன்றாம் நபர் யாரேனும் ஆசை வார்த்தை காட்டி பல்க வந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூறிவிட வேண்டும். இந்த மூன்றாம் நபர் பிரச்சனை பெரும்பாலும் மிடில் கிளாஸ் குடும்பங்களை தான் பாதிக்கிறது.

காதலென்ற மாயை

காதலென்ற மாயை

பருவம் அடைந்த சில வாரங்களில் பூக்க ஆரம்பிக்கும் மலர் காதல். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இது வெறும் இச்சையாக மட்டும் தான் இருக்கிறது. உடல் பசிக்காக மட்டுமே காதல் என்ற போர்வையை போத்திக் கொள்கின்றனர். காதல் தவறல்ல. ஆனால், அதை பெற்றோருக்கு தெரியாமல் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்வது தான் தவறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion